Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

ஆட்பதிவு சேவைகள் நாளை முதல் வழமைக்கு

Posted on April 19, 2026 by Admin | 165 Views

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொது மக்கள் சேவைகள் நாளை (20) முதல் மீண்டும் வழமையான முறையில் ஆரம்பிக்கப்படுகின்றன. இதனுடன் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவையும் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.