இறக்காமம் பிரதேசத்தில் 34 அபிவிருத்தித் திட்டங்களுக்காக சுமார் 108 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸானின் ஏற்பாட்டில் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான மஞ்சுள ரத்நாயக்க தலைமையில் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இப்பிரதேச அபிவிருத்தித் திட்டங்களுக்காக சுமார் 62.17 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுடன் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத் திட்ட நிதியிலிருந்தும் அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை 14 இலட்சம் ரூபாவும் எம்.ஏ.எம்.அஷ்றஃப் தாஹிர் 10 இலட்சம் ரூபாவும் வசந்த பியதிஸ்ஸ 6 இலட்சம் ரூபாவுமாக 45.79 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இப்பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகைகளில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் ஒதுக்கப்பட்ட தொகையே அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.