Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உடல் எடையை குறைக்க புதிய மாத்திரை கண்டுபிடிப்பு

Posted on May 14, 2026 by Admin | 275 Views

உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சைகளில் தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் GLP-1 ஊசிகளுக்கு மாற்றாக புதிய மாத்திரை ஒன்று கவனம் ஈர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘ஒர்ஃபோக்லிப்ரான்’ (Orforglipron) எனப்படும் இந்த மாத்திரை உடல் எடை குறைந்த பின்னர் மீண்டும் அதிகரிக்கும் அபாயத்தைத் தடுக்க உதவக்கூடியதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மருந்து விரைவில் பிரித்தானியாவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசியை கட்டுப்படுத்தும் ஹோர்மோனின் செயல்பாட்டை ஒத்த விதமாக இயங்கும் இந்த மாத்திரை உணவு ஆசையை குறைத்து உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த மாத்திரையை பயன்படுத்தியவர்கள் தாங்கள் குறைத்த உடல் எடையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவை மீண்டும் அதிகரிக்காமல் பராமரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊசி மூலம் வழங்கப்படும் சிகிச்சைகளை விட மாத்திரை வடிவில் மருந்தை பயன்படுத்துவது எளிமையானதுடன் செலவிலும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

எனினும் குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற லேசான பக்கவிளைவுகள் சிலருக்கு ஏற்படக்கூடும் என்றும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.