Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Posted on May 14, 2026 by Admin | 263 Views

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.