Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் மே 28ஆம் திகதி கொண்டாடப்படும்

Posted on May 17, 2026 by Admin | 122 Views

இலங்கையில் இம்முறை ஹஜ் பெருநாள் எதிர்வரும் மே 28ஆம் திகதி கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியின் இறுதியான 12ஆவது மாதமான துல் ஹஜ் மாதத்திற்கான புதிய தலைப்பிறை இன்று நாட்டின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் மே 19ஆம் திகதியாக கணிக்கப்படுவதுடன் அதனை அடிப்படையாகக் கொண்டு மே 28ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொன்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.