Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

நெல்லின் விலை 100 ரூபாய் வரை சரிவு

Posted on May 20, 2026 by Admin | 217 Views

சந்தையில் ஒரு கிலோகிராம் நாடு நெல்லின் விலை 100 ரூபாய் வரை குறைந்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தியாகும் கீரி சம்பா அரிசிக்கு மாற்றாக வெளிநாடுகளில் இருந்து கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானமே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டில் அரிசித் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் இருப்பதாகக் கூறி கடந்த மாதம் அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதன் விளைவாக பெரும் போக அறுவடையில் கிடைத்த நெல்லை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.