Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

இன்று இலங்கையில் தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சி

Posted on June 25, 2026 by Admin | 247 Views

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (25) திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று கணிசமாகக் குறைந்துள்ளமை நுகர்வோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (24) 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை (25) இன்று 4,000 ரூபாயால் குறைவடைந்து 376,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதன் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆபரணத் தயாரிப்புக்கு அதிகம் பயன்படுத்தப்படும் 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை நேற்று 349,600 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், இன்று 3,600 ரூபாயால் குறைந்து 346,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கமைய, 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகக் குறைந்துள்ளதாக நகையக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைவாகவே உள்நாட்டிலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.