Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

130 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தாமதம் குறித்து பாராளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி இன்று கேள்வி

Posted on July 22, 2026 by Admin | 162 Views

முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த நான்கு வருடங்களாகப் பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள 130 அரபுக் கல்லூரிகளின் பதிவுகள் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இன்று(22) பாராளுமன்றத்தில கேள்வியெழுப்பவுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள வாய்மூல விடைக்கான வினாக்களின் போதே இந்த முக்கிய விடயத்தை அவர் சபையின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளார்.

அரபுக் கல்லூரிகளைப் பதிவு செய்வதற்காக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு 130 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த நான்கு வருடங்களாக குறித்த திணைக்களத்தினால் இவற்றுக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இந்தத் தாமதம் தொடர்பில் அமைச்சர் அறிவாரா என அவர் சபையில் வினவவுள்ளார்.