Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

அட்டாளைச்சேனை ‘House Of English’ இல் நடைபெற்ற சிரமதான நிகழ்வு

Posted on August 6, 2026 by Admin | 77 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை ‘ஹவுஸ் ஒப் இங்கிலிஷ்’ (House of English) கல்வி நிறுவனத்தில், மாணவர்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலும், டெங்கற்ற சுகாதாரமான சூழலை உருவாக்கும் வகையிலும் “டெங்கற்ற பாடசாலை, சிறந்த பாடசாலை” எனும் தொனிப்பொருளிலான விசேட விழிப்புணர்வுக் கலந்துரையாடலும் சிரமதானப் பணி பணிப்பாளர் எம்.எஸ். ஜனிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இச்செயற்றிட்டம் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலைச் சூழலைத் தூய்மையாகப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு நிகழ்வில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) எஸ்.ரி. கலீலுர் ரஹ்மான் கலந்துகொண்டு டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட ஆலோசனைகளையும் நடைமுறை வழிகாட்டல்களையும் வழங்கியதுடன் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு துப்பரவு செய்யும் பாரிய சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.