Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

நற்பிட்டிமுனை அபிவிருத்திக்கு நிசாம் காரியப்பர் எம்.பி 25 இலட்சம் நிதி ஒதுக்கீடு

Posted on August 12, 2026 by Admin | 163 Views

(கல்முனை செய்தியாளர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நற்பிட்டிமுனை பிரதேசத்தின் அபிவிருத்திக்காக சுமார் 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந் நிதி ஒதுக்கீட்டின் முதற்கட்டமாக நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரிக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் தளபாடங்கள் (கதிரைகள்) என்பன வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பளீல், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். மஜீட், விரிவுரையாளரும் தாருல் ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்-ஷெய்க் ஏ.எல். நாஸிர் கனி (ஹாமி), கட்சியின் நற்பிட்டிமுனை பிரதேச மத்திய குழு செயலாளர் ஏ.எஸ்.எம். ஜௌபர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார், நீதிமன்ற உத்தியோகத்தரும் சமாதான நீதவானுமான எம்.ஐ. றினோஸ், கட்சியின் நற்பிட்டிமுனை இளைஞர் அமைப்பாளர் ஐ.எம். றிபான் மற்றும் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.

குறித்த நிதியொதுக்கீட்டின் இரண்டாம் கட்டமாக நற்பிட்டிமுனை பொதுச்சந்தைக்கு மேல் அமைந்துள்ள கலாசார மண்டபத்தை 20 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கும் பணிகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.