Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு

Posted on August 15, 2026 by Admin | 243 Views

பரீட்சைத் திணைக்களத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட பதிவாளர் தரம் II க்கான (உரித்துப் பதிவாளர் / மாவட்டப் பதிவாளர் / காணிப் பதிவாளர்) ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் ஜுனைதீன் முகம்மட் பைறூஸும் உள்ளடங்குகின்றார்.

அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகவும், நிந்தவூர் 15 ஆம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட முகம்மட் பைறூஸ், தற்போது நிந்தவூர் பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்டப் பதிவாளராகக் கடமையாற்றி வருகின்றார். இப்பிராந்தியத்தில் அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயலாற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுள் ஒருவராக இவர் அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இப்போட்டிப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளதன் ஊடாக எதிர்காலத்தில் காணிப் பதிவகமொன்றின் பதிவாளராகவோ அல்லது மாவட்டப் பதிவாளராகவோ பதவி உயர்வு பெற்றுச் சேவையாற்றும் வாய்ப்பினை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.