Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எச்.பி. அனீஸ் நியமனம்

Posted on September 7, 2026 by Admin | 169 Views

நிதி அமைச்சின் திறைசேரியின் கீழ் இயங்கும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் (Department of National Planning) புதிய பிரதிப் பணிப்பாளராக அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி எச்.பி. அனீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, தேசிய மட்டத்திலான பாரிய திட்டமிடல்கள், அரச வளப்பகிர்வு மற்றும் முதலீட்டு முகாமைத்துவம் சார்ந்த கொள்கை ரீதியான முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் திறைசேரியின் பிரதான திணைக்களங்களில் ஒன்றாக இது விளங்குகின்றது.

இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த அரச உயர் பதவியொன்றுக்கு அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலிருந்து தகுதிவாய்ந்த ஒரு அதிகாரி தெரிவு செய்யப்பட்டுள்ளமை முழுப் பிரதேசத்துக்கும் சமூகத்துக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகப் பார்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகத் திறைசேரியில் மிகவும் பொறுப்புவாய்ந்த இந்தப் புதிய பதவியினை ஏற்றுள்ள எச்.பி. அனீஸ் அவர்களுக்கு அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், கல்விமான்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது உத்தியோகபூர்வ வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.