Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் ஹாபிழ்கள் மற்றும் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு விழா | | இலங்கை – ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்ற நட்புறவுச் சங்க உதவிச் செயலாளராக உதுமாலெப்பை எம்.பி. தெரிவு | | தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்புரை |
Nov 29, 2026

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

Posted on September 17, 2026 by Admin | 141 Views

தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இன்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விசேட விஜயத்தின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஷாஜஹானுடன் இணைந்திருந்தார்.

பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்த அமைச்சரை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம்.ஜுனைதீன் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விசார் சமூகத்தினர் வரவேற்றனர்.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்களான ஸ்ரீ.மு.கா. செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.

அத்துடன் கட்சியின் முக்கியஸ்தர்களான பொருளாளரும் கல்முனை முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதர், வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளரும் கல்முனை முன்னாள் முதல்வருமான சிராஸ் மீராசாஹிப், அம்பாறை மாவட்டச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.சமால்தீன், உயர்பீட உறுப்பினர் ஏ.கே.அமீர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மேலும் அமைச்சர் ஷாஜஹானுடன் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த விசேட தூதுக்குழுவினரும் இவ்விஜயத்தில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.