Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

மாகாண மட்டக் கணிதப் போட்டியில் முதலிடம் பெற்ற அஸ்-சிறாஜ் வித்தியாலய மாணவன் ஹம்தி

Posted on September 19, 2026 by Admin | 107 Views

மாகாண மட்டத்தில் நடைபெற்ற கணித வினாடி-வினாப் போட்டியில் (Maths Quiz Competition) அக்கறைப்பற்று அஸ்-சிறாஜ் மகா வித்தியாலய மாணவன் ஏ. அஹமட் ஹம்தி முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

சிரேஷ்ட பிரிவினருக்கான (தரம் 12-13) கணித வினாடி-வினாப் போட்டியிலேயே அஸ்-சிறாஜ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர கணிதப் பிரிவில் கல்வி பயிலும் இம்மாணவன் இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அக்கறைப்பற்று கல்வி வலயத்திலிருந்து இம்முறை தேசிய மட்டக் கணித வினாடி-வினாப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி தனது பாடசாலைக்கும், கல்வி வலயத்திற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ள அஹமட் ஹம்திக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தினர் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.