Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

மு.கா.வின் புதிய தேசியப் பட்டியல் எம்.பியாக சட்டத்தரணி றிபான் நியமனம்

Posted on September 21, 2026 by Admin | 82 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தியோகபூர்வ நியமனத்தை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று (21) திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.

பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து தேசியப் பட்டியல் ஆசனத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையிலேயே சட்டத்தரணி றிபான் மு.கா. உயர்பீடத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய எம்.பி. நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேசியப் பட்டியல் எம்.பிக்கான நியமனம் வழங்கும் இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தவிசாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோருடன் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி. சமால்தீன், மௌலவி ஹாமித் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.