Top News
| பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை |
Oct 15, 2026

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய உதவிக் கல்விப் பணிப்பாளராக எஸ்.ஹாஸீக் கடமையேற்பு

Posted on September 24, 2026 by Admin | 171 Views

மட்டக்களப்பு மத்தி (ஏறாவூர்) வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய உதவிக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) அதிகாரியான எஸ். ஹாஸீக் அவர்கள் இன்று(24) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னர் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் திட்டமிடல் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளராக இவர் கடமையாற்றியிருந்தார். கிண்ணியா வலயத்தில் கல்வி அபிவிருத்தி மற்றும் பௌதீக வள மேம்பாடு சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து சிறப்பான சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரது வினைத்திறனான திட்டமிடல் மற்றும் நிர்வாக ஆளுமை காரணமாக அங்குள்ள கல்விச் சமூகத்தினர் மத்தியில் இவர் பெரும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

தனது அனுபவம் மற்றும் செயற்றிறன் மிக்க நிர்வாகத்திறன் ஊடாக மட்டக்களப்பு மத்தி வலயத்தின் கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு படிநிலைக்கு உயர்த்துவதற்கு புதிய உதவிக் கல்விப் பணிப்பாளர் காத்திரமான பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத்தி தொடர்பில் இவர் விசேட கவனம் செலுத்துவார் எனவும் நம்பப்படுகிறது.

புதிதாக கடமையைப் பொறுப்பேற்றுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஹாஸீக் அவர்களுக்கு கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.