Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

இறக்காமத்தில் அரச கட்டடங்கள் அமைந்துள்ள காணிகளுக்கு நட்டஈடு பெறுவதற்கு விசேட குழு நியமனம்

Posted on September 29, 2026 by Admin | 77 Views

இறக்காமம் பிரதேசத்தில் அரச நிறுவனங்கள் அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு உரிய நட்டஈட்டைப் பெற்றுக்கொடுத்தல் அல்லது அவற்றுக்குப் பதிலாக மாற்றுக் காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் 2026.09.28ம் திகதி இறக்காமம் பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலகம், இறக்காமம் ஆதார வைத்தியசாலை மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உள்ளிட்ட முக்கிய அரச கட்டடங்கள் தனியார் காணிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் சங்கம், தங்களது காணிகளுக்குரிய நட்டஈட்டையோ அல்லது மாற்றுக் காணிகளையோ பெற்றுத் தருமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எல். முஸ்மி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளருமான முஷாரப் முதுநபீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி. சமால்தீன், பிரதேச சபை உறுப்பினர் என்.எம். ஆஷிக், முன்னாள் தவிசாளர் எம்.ஐ. நைசர், கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ. ரியாஸ் (ஆசிரியர்), இறக்காமம் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ்.எம். நிஸார் (ஆசிரியர்) மற்றும் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் பலரும் இதில் பங்கெடுத்தனர்.

இக்கூட்டத்தில் காணி உரிமையாளர்களுக்கான நட்டஈடு அல்லது மாற்றுக் காணிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இப்பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்துவதற்காக உதுமாலெப்பை(pm) தலைமையில் விசேட குழுவொன்றும் உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:

1. எம்.எல். முஸ்மி (பிரதேச சபை தவிசாளர்)

2. ஏ. ரியாஸ் (கட்சியின் உயர்பீட உறுப்பினர்)

3. எஸ்.எம். நிஸார் (அமைப்பாளர்)

4. என்.எம். ஆஷிக் (பிரதேச சபை உறுப்பினர்)

5. எம்.ஐ. நைசர் (முன்னாள் தவிசாளர்)

6. கே.எல். சமீர்

7. பி.டி. சுபைர் (ஓய்வுபெற்ற அதிபர்)

8. ஏ.எல். மன்சூர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)

9. எம். அன்வர்

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசாங்கத்துடனும் உரிய அமைச்சுக்களுடனும் இக்குழுவினர் நேரடிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர்.