Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக என்.மணிவண்ணன் கடமையேற்பு

Posted on September 30, 2026 by Admin | 82 Views

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக என்.மணிவண்ணன் திருகோணமலையிலுள்ள கல்வி அமைச்சு அலுவலகத்தில் நேற்று (28) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் கடந்த சனிக்கிழமை (25) இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான என்.மணிவண்ணன் இதற்கு முன்னர் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய அரச பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.