Top News
| அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தளபாட மோசடியா? போலிச் செய்திக்கு SDEC கடும் கண்டனம் | | சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட்டில் நாட்டுக்குப் பெருமை சேர்த்த அக்கரைப்பற்று அல்-முனவ்வரா மாணவி அனாபா | | பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் |
Oct 16, 2026

தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு

Posted on October 15, 2026 by Admin | 51 Views

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (ரூ. 250,000) பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இத்தளபாடங்களை கல்லூரியின் நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தளபாடங்களை நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஐ.ஏ. சிறாஜ் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கல்லூரியின் நிருவாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்லூரியின் தளபாடத் தேவையினைப் பூர்த்தி செய்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினருக்கு நிர்வாகத்தினர் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் கல்லூரியின் ஏனைய அத்தியாவசியத் தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.