Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கோரி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி!

Posted on October 17, 2026 by Admin | 91 Views

திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு எதிரான சதித்திட்டங்களை முறியடிப்போம்” என்ற பிரதான தொனிப்பொருளில் ‘ஜனவரமே புரவெசியோ’ (மக்களாணையின் குடிமக்கள்) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய மக்கள் பேரணியொன்று சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

கொழும்பு கோட்டைப் பகுதியில் இன்று (17) ஒன்றுகூடிய மேற்படி அமைப்பின் பிரதிநிதிகளும் பெருந்திரளான பொதுமக்களும், ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து கோட்டையிலிருந்து புறப்பட்ட இப்பேரணி காலி முகத்திடல் வழியாக தற்போது ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கிறது. மக்களாணையைப் பாதுகாப்போம் மற்றும் ஊழலுக்குத் துணைபோகும் சதிகளைத் தோற்கடிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு பேரணியில் பங்கேற்றுள்ளவர்கள் முன்னேறிச் செல்வதால் கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.