Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

சாய்ந்தமருதில் நவம்பரில் ‘லீடர் அஷ்ரஃப் கிண்ண’ மாபெரும் கிரிக்கெட் போட்டி

Posted on October 20, 2026 by Admin | 75 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சாய்ந்தமருது பிராந்திய போட்டிகளை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப், கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், உயர் பீட உறுப்பினர் கலாநிதி முபீசால் அபூபக்கர், அம்பாறை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஹக்கானி மஜீத் ஆகியோருடன் கிராம மட்ட இளைஞர் அமைப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இப்போட்டியின் முன்னாயத்தப் பணிகள் குறித்த விசேட கலந்துரையாடல் கட்சியின் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் அமைப்பாளரும் உயர் பீட உறுப்பினருமான எம். பாமி மன்சூர் தலைமையில் நேற்று (19) இரவு சாய்ந்தமருது இளைஞர் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருது பிரதேச மட்டப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் போட்டிகளை ஒருங்கிணைப்பதற்காகப் பிரதேச இளைஞர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களை உள்ளடக்கிய விசேட ஏற்பாட்டுக் குழுவொன்றும் இதன்போது தெரிவு செய்யப்பட்டது.