Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான உயரம் பாய்தல் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் அப்துல்லாஹ் சாதனை

Posted on October 20, 2026 by Admin | 86 Views

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் உயரம் பாய்தல் நிகழ்வில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் என். அப்துல்லாஹ் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் 2.00 மீற்றர் உயரத்தைப் பாய்ந்தே இவர் இச்சாதனையைப் படைத்துள்ளார்.

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த இம்மாணவனைப் பயிற்றுவிப்பாளர்களான எம்.ஏ.எம். ரஸ்பாஸ் மற்றும் எம்.எம். பஸீ அஹமட் ஆகியோர் முழுமூச்சுடன் பயிற்றுவித்திருந்தனர். அத்துடன் மாணவனின் விளையாட்டுத் திறனை அடையாளம் கண்டு தொடர்ச்சியான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்கிய உடற்கல்வி ஆசிரியர்களான எம்.எச்.எம். கியாஸ், எம்.எம். ரிப்கி, எஸ். சிம்சார், ஏ.எம். சஜீத், எஸ்.எம். ஜஸீல், எஸ்.எம். இஸ்மத் மற்றும் திருமதி கே. பர்ஸானா ஆகியோரின் பங்களிப்பும் இவ்விருதுக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது.

மாணவன் அப்துல்லாஹ்வின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் பாடசாலைக்குப் பெரும் கௌரவத்தைப் பெற்றுத் தந்துள்ளது. ஒரு மாணவனின் வெற்றி என்பது அவரது தனிப்பட்ட முயற்சி மட்டுமன்றி பயிற்றுவிப்பாளர்களின் அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டல், பெற்றோரின் ஆதரவு மற்றும் நிர்வாகத்தின் ஊக்குவிப்பு ஆகிய அனைத்தினதும் கூட்டு முயற்சியாகும்.

இச்சாதனைக்குப் பின்புலமாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ், பிரதி அதிபர் என்.டி. முபாரக் அலி, இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான உதவி அதிபர் எம்.எச்.எம். ரஸ்ஸாம், உதவி அதிபர்களான ஏ.எம். உனைஸ், ஏ.ஜி. சமூர்,பாடசாலை முகாமைத்துவக் குழு (SMT), பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC), பழைய மாணவர் சங்கம் மற்றும் மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்தினர் அனைவரும் தமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் மாணவனுக்கு தெரிவித்துள்ளனர். அப்துல்லாஹ் எதிர்காலத்தில் சர்வதேச மட்டத்திலும் சாதனைகளைப் படைக்க நாமும் வாழ்த்துகிறோம்.