Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார்

Posted on October 22, 2026 by Admin | 82 Views

அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளம் கற்கையாளரான அப்துல் முனாஸ் அய்யாஸ் சிவில் மற்றும் கட்டுமானப் பொறியியல் துறையில் (BSc (Hons) in Civil & Construction Engineering) சிறப்புப் பட்டத்தைப் பெற்றுத் தனது ஊருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (SLIIT) தனது உயர் கல்வியைத் தொடர்ந்த இவர் பொறியியல் துறையிலான நான்கு ஆண்டு காலப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போதே இப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை அக்கரைப்பற்றில் நிறைவு செய்த அய்யாஸ் உயர்கல்வியில் காட்டிய அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் ஆய்வுத் திறன் ஆகியவற்றின் பலனாகவே இந்த உயரிய கல்விச் சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (SEUSL) இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி (Dean) முஹம்மது ஹனீபா அப்துல் முனாஸ் அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் கல்விசார் வழிகாட்டலும் குடும்பத்தினரின் ஊக்குவிப்பும் இவரது இந்த வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.

நவீன கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் துறையில் சிறந்த எதிர்காலத்தைக் கொண்டுள்ள இளம் பொறியியலாளர் அப்துல் முனாஸ் அய்யாஸுக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விமான்கள், நலன்விரும்பிகள் மற்றும் அக்கரைப்பற்றுப் பிரதேச மக்கள் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.