ஓய்வூதியத் திணைக்களத்தின் கணினி முறைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக அரச உத்தியோகத்தர்களுக்கான விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் (W&OP) ஓய்வூதியத் திட்டத்தின் மீள்பதிவுக்கான காலக்கெடுவை மேலும் நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த மீள்பதிவுக்கான இறுதித் திகதி நீடிக்கப்படவுள்ளதுடன் கணினி முறைமை முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டதன் பின்னர் புதிய இறுதித் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் அரச உத்தியோகத்தர்கள் இத்திட்டத்திற்காகத் தாங்களாகவே நேரடியாக இணையவழியில் பதிவு செய்ய முடியாது. மாறாக தமது நிறுவனத்தின் அதிகாரமளிக்கப்பட்ட கோவைப் பொறுப்பு உத்தியோகத்தர் (Subject Clerk) ஊடாகவே உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தமது தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என ஓய்வூதியத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.