Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் ஹாபிழ்கள் மற்றும் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு விழா | | இலங்கை – ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்ற நட்புறவுச் சங்க உதவிச் செயலாளராக உதுமாலெப்பை எம்.பி. தெரிவு | | தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்புரை |
Nov 29, 2026

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் 96 பாடசாலை அதிபர்கள் பங்கேற்ற கல்வி அபிவிருத்திக் கூட்டம்

Posted on November 23, 2026 by Admin | 88 Views

கிழக்கு மாகாணத்தின் ஆறு கல்வி வலயங்களைச் சேர்ந்த 96 பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட ஆசிரியர்களுக்கான விசேட கலந்துரையாடல் இன்று (23) அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் தொடருறு கல்விக்குப் பொறுப்பான உப பீடாதிபதி ஏ.எஸ்.எம். சதாத் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று, திருக்கோவில், கல்முனை, சம்மாந்துறை, பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு மத்தி ஆகிய கல்வி வலயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை அதிபர்களும் சிரேஷ்ட ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

இதன்போது, கல்வித்துறை சார்ந்த முக்கிய விடயங்கள், பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி மற்றும் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.