Top News
| 37 வருடகால கல்விச் சேவையிலிருந்து விடைபெறும் கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எம். ரியாஸ் | | ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கோரி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி! | | அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தளபாட மோசடியா? போலிச் செய்திக்கு SDEC கடும் கண்டனம் |
Oct 17, 2026

பொத்துவில் சர்வோதயபுரம் திண்மக்கழிவு நில நிரப்பு தளத்தினை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

Posted on August 24, 2025 by Admin | 335 Views

பொத்துவில் பிரதேச சபைக்குச் சொந்தமான சர்வோதயபுரம் பகுதியில் அமைந்துள்ள திண்மக்கழிவு சேகரிப்பு நில நிரப்புத் தளத்தில் குவிந்திருந்த கழிவுகளை ஒதுக்கி மட்டப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று(23.08.2025) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் Sustainable Clean Sri Lanka அமைப்பினரும் பங்கேற்றனர்.

மேலும், வரும் திங்கட்கிழமை குறித்த நில நிரப்புத் தளத்தில் மிகப்பெரிய சிரமதான நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வில் பொதுமக்கள் அமைப்புகள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள் அனைத்தும் இணைந்து பங்கேற்குமாறு, பிரதேச சபை தவிசாளர் அழைப்பு விடுத்துள்ளார்.