Top News
| நாடளாவிய மின்தடைக்கான உண்மைக் காரணத்தினை வெளியிட்ட பிரதி அமைச்சர் | | 37 வருடகால கல்விச் சேவையிலிருந்து விடைபெறும் கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எம். ரியாஸ் | | ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கோரி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி! |
Oct 18, 2026

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து அமைச்சு பறிக்கப்பட்டதா?

Posted on October 10, 2025 by Admin | 304 Views

துறைமுகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து நீக்கப்படவில்லை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இலக்குகளை திறம்பட அடையும் வகையில் சில அமைச்சகங்கள் மறுசீரமைக்கப்பட்டதாகவும், இதுவே மாற்றத்திற்கான காரணம் எனவும் அவர் கூறினார்.

இன்றைய (10) பாராளுமன்ற அமர்வின் போது, கொள்கலன் அனுமதி ஊழல் சம்பவம் காரணமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நீக்கப்பட்டாரா என இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்தார்.

மேலும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் புதிய மற்றும் மேலதிக பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பிமல் ரத்நாயக்க வசமிருந்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அவரிடமிருந்து பறிக்கப்பட்டதாக சில வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும், அந்த நடவடிக்கைக்கு கொள்கலன் அனுமதி ஊழல் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டார்.

“எப்படியிருந்தாலும், இந்த நடவடிக்கையை எடுத்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உரையினை நிறைவு செய்தார்.