Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை அல் அர்ஹம் மாணவர்களின் அபார வெற்றி: 148 புள்ளிகளுடன் பாத்திமா நுதா முதலிடம்

Posted on September 9, 2026 by Admin | 190 Views

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயம், 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்து பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. இச்சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட பாராட்டு விழா அண்மையில் (07) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ்.எம். ஸாகிர் உஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்த மாணவர்களும், பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய மாணவர்களும் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் விசேடமாகக் கௌரவிக்கப்பட்டனர்.

இம்முறை நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு இப்பாடசாலையிலிருந்து 26 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 24 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 92 சதவீத சித்தியைப் பதிவு செய்து பாடசாலைக்கு பாரிய முன்னெடுப்பை வழங்கியுள்ளனர்.

அம்பாறை மாவட்ட வெட்டுப்புள்ளிகளைத் தாண்டி 03 மாணவர்கள் சித்தியெய்தியுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் எம்.ஐ. பாத்திமா நுதா எனும் மாணவி 148 புள்ளிகளைப் பெற்று அப் பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப் பதிவு செய்துள்ளார்.

பௌதீக வளப்பற்றாக்குறைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் அதிபரின் சிறந்த முகாமைத்துவம், தரம் 5 மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களின் அயராத உழைப்பு, மற்றும் பெற்றோரின் பூரண ஒத்துழைப்பு , பாடசாலை நிறைவேற்றுக் குழு(SDEC) , பழைய மாணவர் சங்கம் என்பனவே இந்த அபார வெற்றிக்குக் காரணமென நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் வழிகாட்டல்களும் இங்கு நினைவுகூரப்பட்டன.

நிகழ்வில் சித்தியெய்திய மாணவர்கள் மாத்திரமன்றி பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களால் மாலை அணிவிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டமை பாராட்டத்தக்கது.