கல்முனை கல்வி மாவட்டத்தின் ‘டாஸ்க் கிரிக்கெட் கார்னிவல் – 2026’ (Task Cricket Carnival) எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இச்சுற்றுப்போட்டியை முன்னிட்டு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ டீ-சேர்ட் (Official T-Shirt) அறிமுக நிகழ்வு கடந்த 30ம் திகதி நடைபெற்றது.
டாஸ்க் கிரிக்கெட் சபையின் செயலாளரும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான எம்.எப்.எம். நழீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை. அறபாத் முகைதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உத்தியோகபூர்வ டீ-சேர்ட்டை அறிமுகம் செய்துவைத்தார்.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எச். பௌஸ் (நிருவாகம்), திருமதி தனுஷியா ராஜசேகர் (திட்டமிடல்), ஏ.எல். அப்துல் மஜீத், திருமதி நஸ்மியா சனூஸ், திருமதி மாதுரி மையூரன் , வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், நிதி உதவியாளர், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், சமாதானக் கல்வி இணைப்பாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் இந்நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.