Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர்

Posted on October 14, 2026 by Admin | 52 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த விசேட மீளாய்வுக் கூட்டம் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் அம்பாறையிலுள்ள கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கட்சியின் தேசிய பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர், தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன், பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.ரி. சப்ராஸ், அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி. சமால்தீன், மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ஏ.எம். ஹக்காணி, இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் எம். முஸ்மி, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச மற்றும் இளைஞர் அமைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் போட்டிகளை நடத்துவதற்கான திகதிகள் முடிவு செய்யப்பட்டன. அதற்கமைவாக பின்வரும் திகதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன:

 ஒக்டோபர் 25: அட்டாளைச்சேனை

 நவம்பர் 01: பொத்துவில்

 நவம்பர் 05: நிந்தவூர், இறக்காமம் / வறிப்பத்தான்சேனை

 நவம்பர் 07 மற்றும் 08: சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை

 நவம்பர் 10: அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில், மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி, கல்முனை, சம்மாந்துறை, மருதமுனை மற்றும் நாவிதன்வெளி.