இலங்கை – ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உதவிச் செயலாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நேற்று (26) இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் இப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற உறவுகள், இராஜதந்திரத் தொடர்புகள் மற்றும் பொருளாதார, சமூக, கலாசார ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நட்புறவுச் சங்கம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.