Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு

Posted on March 1, 2026 by Admin | 329 Views

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கெமைனி உயிரிழந்ததாக ஈரான் அரச ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

இஸ்ரேல்–அமெரிக்க இணைந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியும் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கமேனியின் உடல் மீட்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.

ஆனால் இச்செய்திகளை ஈரான் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகள் ஆரம்பத்தில் மறுத்து விளக்கம் அளித்திருந்தன. இதனால் சர்வதேச அளவில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் கமேனியின் உயிரிழப்பை தற்போது ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலில் அவரது மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளையும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து ஈரானில் 40 நாட்கள் பொதுத் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்களில் மொத்தம் 40 ஈரான் அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. அவர்களில் ஆறு பேர் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதுடன், சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும் தீவிர எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.