Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு

Posted on September 1, 2026 by Admin | 117 Views

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அபிவிருத்திச் குழுத் தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று (01) நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்கிரமாரச்சியின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். அப்துல் வாசித், அபூபக்கர் ஆதம்பாவா, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசாங்கத் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் இக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.