Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

மு.கா. தேசியப் பட்டியல் எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா!

Posted on September 14, 2026 by Admin | 110 Views

(பொத்துவில் செய்தியாளர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த எம்.எஸ். அப்துல் வாஸித் தனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளார்.

கட்சியின் உள்ளக இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த குறித்த பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து இன்று (14) அவர் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் அமானிதமாக வழங்கப்பட்டிருந்த இந்தப் பதவியை ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததன் காரணமாக மீண்டும் கட்சியிடமே ஒப்படைக்கும் வகையிலேயே அவர் எம்.பி. பதவியிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.