Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

பொலிஸ் சான்றளிப்புச் சான்றிதழ் பெற காத்திருப்போருக்கான அறிவித்தல்

Posted on September 15, 2026 by Admin | 124 Views

கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக பொலிஸ் சான்றளிப்புச் சான்றிதழ்களுக்கான (Police Clearance Certificate) இணையவழி விண்ணப்பச் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்கில் இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, விண்ணப்பதாரர்கள் தமது பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக நேரடியாகச் சென்று சான்றளிப்புச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இணையவழி கணினி முறைமை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு வழமைக்குத் திரும்பும் வரை, விண்ணப்பதாரர்கள் தமக்கு அருகிலுள்ள பிரதேச பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று இந்தச் சேவையினைப் தடையின்றிப் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.