Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள வழங்க 5,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Posted on October 4, 2026 by Admin | 86 Views

வாகன விபத்தொன்று தொடர்பில் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை எவ்வித சட்ட நடவடிக்கைகளுமின்றி சாரதியிடம் மீண்டும் கையளிப்பதற்காக 5,000 ரூபா இலஞ்சம் கோரிப் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரி சென்ற 2026.10.02ஆம் திகதி பிற்பகல் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுக்குள் வைத்து இந்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போதே ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் அதிகாரிக்கு எதிரான மேலதிக சட்ட நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.