Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 21, 2026

டிஜிட்டல் திரைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பாடசாலைகளில் மீண்டும் அச்சிடப்பட்ட புத்தகங்களை வழங்க ஸ்வீடன் அரசு முடிவு

Posted on October 25, 2026 by Admin | 97 Views

வகுப்பறைகளில் டேப்லெட் மற்றும் கணினி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளின் அதிகப்படியான பயன்பாட்டால் மாணவர்களுக்கு ஏற்படும் உடல்நலக் பாதிப்புகள் மற்றும் கவனச்சிதறலைத் தடுக்க, ஸ்வீடன் அரசு மீண்டும் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் சாதனங்கள் மூலம் கல்வி கற்பதால் மாணவர்களின் வாசிப்புத் திறனும், நினைவாற்றலும் பெருமளவு சரிந்துள்ளதாகக் கரோலின்ஸ்கா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச ஆய்வுகள் எச்சரித்தன. இதனைத் தொடர்ந்து, ஸ்வீடன் பள்ளிக் கல்வி அமைச்சர் லோட்டா எட்ஹோம், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிஜிட்டல் திரைகளை முற்றிலுமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், “ஒரு மாணவருக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு அச்சிடப்பட்ட புத்தகம்” வழங்குவதை உறுதி செய்யப் பல நூறு மில்லியன் குரோனர் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை விட, காகிதப் புத்தகங்களை வாசிப்பதும் பேனாவால் எழுதிப் பழகுவதுமே மாணவர்களின் மூளை வளர்ச்சிக்கும் ஆழமான கற்றலுக்கும் சிறந்தது எனக் கூறி ஸ்வீடன் எடுத்துள்ள இந்த முடிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.