Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சட்டத்தரணி சில்மி அஹமட் மஜீட் பிரசித்த நொத்தாரிசாக சத்தியப்பிரமாணம்

Posted on October 28, 2026 by Admin | 90 Views

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சட்டத்தரணி சில்மி அஹமட் மஜீட் கல்முனை வலயத்திற்கான பிரசித்த நொத்தாரிசாக (Public Notary) நேற்று (27) உத்தியோகபூர்வமாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இடம்பெற்ற விசேட நிகழ்வின்போதே இவர் தனது பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டார். சத்தியப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து பிரசித்த நொத்தாரிசாகப் கடமையாற்றுவதற்கான உத்தியோகபூர்வ நியமனப் பத்திரமும் நீதிபதியினால் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் தற்போது பிரசித்த நொத்தாரிசாகவும் நியமனம் பெற்றுள்ளதன் மூலம் கல்முனை வலய மக்களுக்குச் சட்ட மற்றும் ஆவணப் பதிவு ரீதியான சேவைகளைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்கவுள்ளார்.

இவரது இந்த நியமனத்திற்குப் பிரதேசத்தின் சிரேஷ்ட சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.