பாதுகாப்பு கோரிய எம்.பி.க்களின் முன்மொழிவுகள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆபத்து மதிப்பீடு முடிந்த உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக பதில் ஐஜிபி தெரிவித்தார்.
Read Moreஅம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில், மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்றன.
Read Moreதென்மேற்கு பருவமழையால் மேல், சப்ரகமுவ, மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் கனமழை அதிகரிக்கலாம். மின்னல், கடுமையான காற்று ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More(ஹபீஸ்) அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரிக்கு முன்பாக இன்று (27.05.2025) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கனரக டிப்பர் வாகனமும் மோதியதால், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பாலமுனையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read Moreஅம்பலாங்கொடையில் எண் 311 தபால் ரயிலில் ஏற்பட்ட கோளாறால், கரையோர ரயில் சேவைகள் தாமதமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நேரத்தை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Read Moreவாழைச்சேனை ஆழ்கடல் மீனவர் சங்க பிரதிநிதிகள், கடற் கொள்ளையால் மீனவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து, ரவூப் ஹக்கீமை சந்தித்து நிரந்தர தீர்வு கோரி நடவடிக்கை கேட்டனர்.
Read Moreசுகயீன விடுப்புக்கு சென்ற சாரதிகள் காரணமாக, இன்று காலை 15 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர் என ரயில்வே பிரிவு தெரிவித்தது.
Read Moreஇறக்காமம், பொத்துவில் பிரதேச சபை ஆட்சி அமைப்பை நோக்கி, ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் புணானையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தியது. பல்வேறு மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Read Moreகலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமனம். ஆகஸ்ட் மாதம் முதல் வெற்றிடமாக இருந்த பதவிக்கு மே 26ஆம் திகதி நியமனம் செய்யப்பட்டுள்ளது.
Read Moreதரமற்ற கரிம உரம் இறக்குமதி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு ரூ.50,000 ரொக்க பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More